Kalpataru
0

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டம், ​நெ.57, கடம்பூர் கிராமம்
அருள்மிகு ஸ்ரீ பாலாம்பிகை சமேத ஸ்ரீ கைலாசநாதர் உடனுறை ஸ்ரீ பாலாம்பிகை தேவி திருக்கோயில் கைலாசநாதர் உடனுறை ஸ்ரீ பாலாம்பிகை தேவி திருக்கோயில்​

பரிவார ஆலய ஸ்தல வரலாறு​:

காஞ்சிநகரத்தை தலைமயயாகக்கொண்டு பல்லவர்கள், சோ, சோழ, பாண்டியர்கள் சூல்காட்சி புரிந்துளி.சானர். அனால் 2.3 24 நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த இரண்டாம் நரசிம்மவர்மன் என்ற ராஜசிம்மன் ஏறக்குறைய 40 ஆண்டுகள் செங்கோல் ஆட்சி புரிந்துள்ளார். அவருடைய காலம் ஆண்மீக பொற்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. காஞ்சி மணிடம் முழுவதும் கைலாசநாதர் கோயிலை தோற்றுவித்ததோடு மாமல்லபுரம் கடற்கரை கோயிலையும் கட்டியிருக்கிறார்.

1200 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கடம்பூரில் கையாசநாதர் திருக்கோயிலை A கட்டமைத்தபோது ஏனோ முடிக்கப்படாத நிலையிலேயே இருந்துள்ளது. இக்கோயில் 15-ம் நூற்றாண்டில் சிறப்பாக ஆட்சிபுரிந்த ஆன்மீக மகாள் திருகிருஷ்ண தேவராயர் கவனத்தால் ஈர்க்கப்பட்டு அதளை புணரமைத்து மீட்டெடுக்க வாயிற்காவலர் நாகம நாயக்கர் மகன்களான லிங்கப்ப நாயக்கர், கொண்டம நாயக்கர், கட்பு நாயக்கர் ஆகியோர்களுக்கு உத்தரவிட்டார். (கல்வெட்டு ஆதாரம் உள்ளது) அப்பொழுதும் இத்திருக்கோயில் முழுமையாக புனரமைக்கப்படாமலேயே இருந்துள்ளது.

இதனை தொடர்ந்து 2005-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த ஊழல் தடுப்பு மற்றும் கணிகாணிப்புத் துறையை தலைமை ஏற்று நடத்தி வந்த இயக்குநர், திரு.நாஞ்சில் குமரனி, ஐ.பி.எஸ், திரு.இராதாகிருஷ்ணனி, ஐ.பி.எஸ்., திரு.முருகேசனி, காவல் கண்காணிப்பாளர் மற்றும் பல்வேறு அதிகாரிகள் சேர்ந்து கூட்டுறவு வீட்டுவசதி சங்கம் துவக்கி அதனைத் தொடர்ந்து 2008 -ம் ஆண்டு முதல் இக்கடம்பூரில் உள்ள இடங்களில் 57ஏக்கர் நிலத்தினை கிரயம் பெற்று விஜிலென்ஸ் நகரம் (2011ல் சுமார் 700 காவலர் முதல் டி.ஜி.பி வரையிலான காவல்துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது) அமைக்கப்பட்டதை தொடர்ந்து இத்திருக்கோயில் 2012-ம் ஆண்டு முதல் புனரமைக்க தொடங்கி தற்போது மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
விஜய நகரம் முதல் விஜிலன்ஸ் நகரம் வரை:

இத்திருக்கோயில் காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டத்தில் அடங்கிய மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட கடம்பூர் கிராமத்தில் விஜிலன்ஸ் நகரில் எழுந்தருளியுள்ளது.  திருப்போரூர் பேரருள் நாயகனான "முருகன்" அவருக்கு இணையான தெய்வங்கள் "இடும்பன்" மற்றும் "கடம்பன்" ஆவார்கள். அவர்களில் கடம்பன் பெயராலேயே கடம்பூர் எனஅழைக்கப்படுவது இத்தலத்தின் சிறப்பாகும். இக்கோவிலின் கல்வெட்டின்படி, இக்கிராமம் 15-ம் நூற்றாண்டிற்கு முன்னரே "கடம்பூர்" என பெயர்பெற்றுள்ளது உறுதி செய்யப்படுகிறது. இத்திருக்கோயில் அகத்தியரால் வழிப்படப்பட்ட சிறப்பிற்குறியதாகும். இத்தலம் 8-ம் நூற்றாண்டில் இரண்டாம் நாசிம்மபல்லவ மன்னரால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால் இத்திருக்கோயில் தொடர்ந்து சிதிலம் அடைந்த நிலையிலேயே இருந்துவந்துள்ளது. பிறகு 15-ம் நூற்றாண்டின் பேரரசனாகிய கிருஷ்ணாதேவராயரின் கவனத்திற்கு எடுத்துசெல்லப்பட்டு கிருஷ்ணதேவராயர் அவர்களின் அரன்மணை தலைமை வாயிற்காவலனான நாகம நாயக்கரின் சகாக்களுக்கு திருக்கோயிலை புணரமைக்க உத்தரவு வழங்கப்பட்டது. அந்த உத்தாவின்படி புனரமைப்பு பணி தொடங்கி ஓரளவே நிறைவேற்றப்பட்டு கோபுரங்கள் மற்றும் தனி சன்னதிகள் எழுப்பப்படாத நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறை இயக்குநரக அலுவலர்களுக்கு குடியிருப்பு வசதி செய்து தரவேண்டி 2005-ம் ஆண்டு ஊழல்தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் ஏற்படுத்தப்பட்டு சுமார் 900 உறுப்பினர்களை கொண்ட சங்கமாக அமைக்கப்படபட்டது. இதன் தொடர்ச்சியாக மேற்படி சங்கத்திற்கு பல்வேறு இடங்களில் அப்போதைய இயக்குநர் திரு.டி.கே.இராஜேந்திரன் ஐ.பி.எஸ். மற்றும் சங்க தனி அலுவலர் திருமதி.ஆசியம்மாள் ஐ.பி.ஏஸ். ஆகியோர்களின் தலைமையில் இடம் தேடியபோது மேற்படி கைலாசநாதர் அவர்களை தன்வசம் கவர்ந்து அவர்களுக்கான 57 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைக்க அருள்பாலித்தார். அவ்வண்ணமே விஜிலன்ஸ் நகர் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டு நகர் ஊரமைப்பு துறை அங்கீகாரத்துடன் உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டது.

இவ்வாறு இருக்க ஓர்நாள் மேற்படி நகரினை பார்வையிட சென்ற திரு.டி.கே. இராஜேந்திரன் அவர்களின் கவனத்தை தன்வசம் ஈர்த்த கைலாசநாதர் தன் சிதிலமடைந்த கோயிலை புணரமைக்க அவரது சிந்தனையில் உத்தரவிட்டார். அவரும் உடனிருந்த அதிகாரிகளை கலந்து ஆலோசித்து புதுப்பிக்கும் பணியை தொடங்க இறைவணின் ஆனைப்படி தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். இதன் தொடர்ச்சியாக 06.04.2012 தேதி அன்று திரு.டி.கே.இராஜேந்திரன் ஐ.பி.எஸ். அவர்கள் திரு.பிச்சாண்டி ஐ.ஏ.எஸ். மேலும் தலைமை ஸ்தபதி திரு. முத்தையா மற்றும் தன் சகாக்களுடன் இத்திருக்கோயிலை ஆய்வுசெய்தனர்.

மேலும் 09.05.2012 தேதியன்று அரியலூர் அரசு கலைக்கல்லூரி முனைவர் திரு.இல.தியாகராஜன் அவர்கள் திருக்கோயிலை ஆய்வு செய்தபோது 15-ம் நூற்றாண்டின்  பேரரசரான திரு. கிருஷ்ணதேவராயர் அவர்களின் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு ஆராய்ச்சி மேற்கொண்டார். இந்த கல்வெட்டு விவரம் அன்றைய தினமலர் நாளிதழிலும் தொல்லியல் துறையின் மாத இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. (29.05.2012 நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது).
Added to cart
- There was an error adding to cart. Please try again.
Quantity updated
- An error occurred. Please try again later.
Deleted from cart
- Can't delete this product from the cart at the moment. Please try again later.